News October 9, 2024
இந்திய மகளிர் அணி 172 ரன்கள் குவித்தது

மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 50, ஃஷபாலி வர்மா 43, ஹர்மன்ப்ரீத் கவுர் 52* ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் சமாரி அட்டபத்து, அமா கஞ்சனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இலங்கைக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
விஜயை குறிவைக்கிறாரா சீமான்?

கடந்த காலங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்த வந்தார் சீமான். ஆனால் மு.க.முத்து மறைவுக்கு ஸ்டாலினிடம் நேரில் ஆறுதல் தெரிவித்த பின், திமுகவை அவர் விமர்சித்தாலும், தவெகவுடன் ஒப்படுகையில் குறைவு என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உதாரணத்துக்கு ‘அணிலே, அணிலே ஓரம் போ அணிலே’ என்ற விமர்சனம் இணையத்தில் வைரல். இதற்கு TVK தொண்டர்கள் சோசியல் மீடியாவில் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 21, 2025
CPR-க்கு தமிழக கட்சிகள் ஆதரவு தாருங்கள்: அண்ணாமலை

தமிழக அரசியல் கட்சிகள் CPR-க்கு ஆதரவு தர வேண்டுமென அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், CM, PM குற்றம் புரிந்தால் பதவிநீக்கம் செய்வதற்கான மசோதா குறித்து பேசிய அவர், மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்படும் புதிய சட்டம் வரவேற்கத்தக்கது என்றார். இச்சட்டத்தால் தவறு செய்தவர்கள் சிறைக்கு செல்வர் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்படும் என்றார்.
News August 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 434 ▶குறள்: குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை. ▶ பொருள்: குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.