News October 9, 2024

BREAKING: ரத்தன் டாடா கவலைக்கிடம்?

image

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள் கிழமை அவர் அனுமதிக்கப்பட்டார். ICU பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மூத்த மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இன்று, திடீரென அவரது உடல்நிலை சற்று மோசமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 11, 2025

தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ஆதரவு!

image

சென்னையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். பனையூரில் விஜய்யை சந்தித்த பிறகு பேசிய போராட்ட குழுவினர், விஜய் போராட்ட பந்தலுக்கு நேரில் வர விரும்பியதாகவும், ஆனால் டிராஃபிக் பிரச்னை ஏற்படும் என்பதால் தாங்கள் இங்கு வந்ததாகவும் கூறினர். மேலும், முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் கூறினர். இது DMK அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

News August 11, 2025

மழைக்காலத்தில் இருமல் பிரச்சனையா?

image

மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டது.
*தீராத இருமலுக்கு தேன் மிகச்சிறந்த மருந்து. தொண்டையின் உள்பகுதியில் இருக்கும் புண் மற்றும் அரிப்பை தேன் குணப்படுத்தும். *உப்புநீரில் வாய்க் கொப்பளித்து வந்தால் தொண்டையில் உள்ள நோய்க்கிருமிகள் அழிந்து, இருமல் தீரும். *சளி, இருமலை குணப்படுத்த இஞ்சியும் உதவும். இதை இஞ்சி டீ, இஞ்சி சாறாகவும் உட்கொள்ளலாம்.

News August 11, 2025

உக்ரைனில் அமைதி திரும்ப உதவுவதாக PM மோடி உறுதி

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி PM மோடியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ரஷ்யா – உக்ரைன் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளங்கியதாகவும், இரு நாடுகளிடையே அமைதி ஏற்பட அனைத்து உதவிகளையும் செய்வேன் எனவும் உறுதி அளித்ததாக PM மோடி தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். புதின் இந்தியா வரவுள்ள நிலையில், ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதை குறைக்க ஜெலன்ஸ்கி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!