News October 9, 2024
சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை – ஆட்சியர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குழந்தை திருமணம் தடைச் சட்டம் 2006 இன் படி குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கடந்த 2023 ஏப்ரல் 1 முதல் தற்போது 2024 மார்ச்.31 வரை 118 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News August 25, 2025
கடன் தொல்லையால் ஓட்டுநர் தற்கொலை

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த பாண்டி(33) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். டிரைவர் பாண்டி குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதியடைந்து வந்த நிலையில் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News August 24, 2025
BREAKING சாத்தூர் அருகே விபத்தில் 35 பேர் காயம்

கழுகுமலை பகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இருக்கன்குடிக்கு மொட்டை எடுப்பதற்காக சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளனர். அப்போது கோவில்பட்டி – நல்லி சத்திரத்திற்கு இடையே நெடுஞ்சாலையில் டயர் வெடித்து வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உட்பட 35 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் கோவில்பட்டி, தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News August 24, 2025
விரைவில் திறக்கப்பட உள்ள புதிய கட்டிடம்

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை அண்மையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்காக இந்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.34 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 20230ம் ஆண்டு துவங்கியது. இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. விரைவில் இந்த கட்டடம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.