News March 17, 2024
வாலாஜாபேட்டை: பூட்டி சீல் வைப்பு

நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேதி இன்று(மாரச் 16) அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து வாலாஜாபேட்டை நகராட்சி சேர்மன் ஹரிணி தில்லையின் அறையை நகராட்சி பொறியாளர் சண்முகம் தலைமையில் ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர். தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்படும் வரை இந்த அறை பூட்டி வைக்கப்படும் என பொறியாளர் தெரிவித்தார்.
Similar News
News April 3, 2025
ராணிப்பேட்டை: அமைச்சர் வெளியிட்ட சூப்பர் திட்டம்

விவசாயத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை விடுத்துள்ளார். அதில், “ராணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் ஆலோசனைகளையும் இடுப்பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்று பயனடைய ஏதுவாக ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் 25 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
News April 3, 2025
இழந்த கௌரவத்தை திரும்ப பெற சோளிங்கர் செல்லுங்கள்

சோளிங்கர் மலையின் மீது அமைந்துள்ள கோவிலில் பெருமாள் யோக நரசிம்மர் வடிவில் உள்ளார். இங்குள்ள யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் தரிசித்து விட்டால் இது வரை இருந்த தடைகள் இல்லாமல் போகும், இழந்த பொருளை, பிரிந்த உறவை, பதவியை, கௌரவத்தை திரும்ப பெறுவது உறுதி என்பது ஐதீகம். மேலும், இந்த மலை மீது 24 நிமிடங்கள் இருந்தாலே ஒருவர் முக்தி அடைவார் என்பதும் நம்பிக்கை. *நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்*
News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <