News March 17, 2024
கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், அரசு கட்டிடங்களில் எந்த வகையான அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் செய்யக்கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் தேர்தல் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Similar News
News April 6, 2025
ராம நவமியில் தரிசிக்க வேண்டிய கோதண்டராமர் கோயில்

சிதம்பரம் மேலரத வீதியில் பேருந்து நிறுத்தம் அருகே நூற்றாண்டு கண்ட மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமர் கோயில் உள்ளது. இக்கோயில் திருச்சித்ரக்கூடம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் விழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இன்று ராமநவமி என்பதால் குடும்பத்தினருடன் இக்கோயிலுக்கு சென்று வாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணிங்க..
News April 6, 2025
கடலூரில் ஒரே மாதத்தில் 22 பேர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கடந்த காலங்களை விட தற்போது மாவட்டத்தில் விபத்து பெருமளவு குறைந்துள்ளது. இதில் கடந்த மார்ச் மாதத்தில் கடலூர் மாவட்டம் முழுவதும் 218 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 248 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக 196 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 6, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 05) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.