News October 9, 2024
பொன்மலை ரயில்வே பணிமனையில் இலவச அனுமதி

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வருடம் தோறும் ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆயுத பூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் ரயில்வே தொழிற்சாலையை பார்வையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
திருச்சி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வரும் ஆக.22ம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுலவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுப்பொருட்கள் மற்றும் வேளாண்மை சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
திருச்சி – பாலக்காடு ரயில் கூடுதல் நிறுத்தங்கள் அறிவிப்பு

திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் இருகூர், சிங்காநல்லூர் ரயில் நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்று (ஆக.18) முதல் திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் மேற்குறிப்பிட்ட நிறுத்தங்களில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும் என கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 18, 2025
திருச்சி வையம்பட்டி ரயில் டிக்கெட் விற்பனை முகவர் வேலை!

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வையம்பட்டி, பூங்குடி ஆகிய ரயில் நிலையங்களில், ரயில் டிக்கெட் விற்பனை முகவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப கட்டணமாக ₹.1120 செலுத்தி, https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT Now