News March 17, 2024
110 லிட்டர் சாராயம் பறிமுதல் ஒருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மிட்னாங்குப்பம் பகுதியில் நேற்று (மார்ச்.16) சாராயம் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் சையத் அப்சல் ரோந்து பணியின் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த அருள் (24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன்.வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளின் செல்போன் எண்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!
News October 24, 2025
திருப்பத்தூரில் தூய்மை பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி தலைமையில் அக்.31 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைதள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. தூய்மை பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து அதன் மீது தீர்வுக்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
News October 23, 2025