News October 9, 2024
ஈரோட்டில் இலக்கிய திறனறித்தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 37 மையங்களில், பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு, தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அரசு, அரசு நிதியுதவி, தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி என 9,443 மாணவ-மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இதில் சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 பேருக்கு, மாதந்தோறும் ரூ.1,500 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 13, 2025
ஈரோடு: மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமா?

சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையில் வீடுகளில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் பிரதமரின் சூரிய ஒளி மின்சார திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் பயன்பெற <
News December 13, 2025
அம்மாபேட்டையில் வசமாக சிக்கிய நபர்!

ஈரோடு: அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பூனாச்சி பேருந்து நிறுத்தத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டனர். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில், பரமத்தி வேலூர் அருகே உள்ள வடக்கு நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 48) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கருப்பசாமியைக் போலீசார் கைது செய்தனர்.
News December 13, 2025
சென்னிமலையில் கோர விபத்து!

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பெருந்துறை ரோடு அருகே உள்ள கேஸ் பங்க் அருகில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர், லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அந்த இளைஞர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


