News October 9, 2024
சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு, கேரளம் மற்றும் வடதமிழக பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பணிக்கு செல்வோர் மறக்காமல் குடை அல்லதுனு ரெயின் கோர்ட் எடுத்துச் செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 14, 2025
சென்னையில் அட்ரோஸிட்டி செய்த திருநங்கைகள் கைது

சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி அரும்பாக்கம் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஜெஸ் ஆலன் ரொசாரியா, காசி தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு திரும்பியபோது, அவரை வழிமறித்த இரு திருநங்கைகள் 2 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று திருநங்கைகளை கைது செய்தனர்.
News September 14, 2025
சேகர்பாபு, மேயர் பிரியா வீடியோ சித்தரிப்பு: பாய்ந்தது வழக்கு

அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, 6 இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மற்றும் ஒரு யூடியூப் சேனல் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் குறித்து புகார்தாரரான வீரலட்சுமி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
News September 14, 2025
சென்னை: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <