News October 9, 2024
கும்பகோணத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

கும்பகோணம் அருகே பேட்டை வடக்கு தெருவில் அப்பகுதியில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்ட பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த 12 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.24,100 பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
Similar News
News August 19, 2025
தஞ்சாவூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை (1/2)

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளாஸ் ரூம் டிரெயினிங்கின் போது மாதம் ரூ.5000, இன்டெர்ன்ஷிப்பில் மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு நாளைக்குள் (ஆக.20) <
News August 19, 2025
தஞ்சாவூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள். 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர நல்ல வாய்ப்பு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 19, 2025
தஞ்சாவூர்: இறப்பிலும் இணைபிரியா தம்பதியர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (70) – கவிதா (60) தம்பதியினர். திடீரென நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதனை அறிந்த மனைவி கவிதா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.