News October 9, 2024

Motor News: சந்தைக்கு வந்த KTM நிறுவனத்தின் புது வரவு

image

இந்தியச் சந்தையில் மேம்படுத்தப்பட்ட 200 DUKE பைக்கை KTM நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6 கியர் பாக்ஸ், 25 Bhp பவர், 19.3 NM டார்க் இழுவிசை, 199.5 cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம்பெற்றுள்ளன. 5 இன்ச் DFT டிஸ்பிளே மூலம் KTM கனெக்ட் ஆப்ஸ் இணைத்து நேவிகேஷன் வசதியை பயன்படுத்தலாம். லிட்டருக்கு 35 Km மைலேஜ் தரும். 159 Kg எடையில், 3 புது வண்ணங்களில் கிடைக்கும் இதன் ஷோரூம் விலை ₹2.03 லட்சமாகும்.

Similar News

News August 9, 2025

சளி என்று போனால் நாய்கடி ஊசி போடுகிறார்கள்: EPS

image

தற்போது அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸுகள், மருந்துகள் போதியளவில் இல்லை என இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். அருப்புக்கோட்டையில் பேசிய அவர், சளி என்று அரசு மருத்துவமனைக்கு சென்றால் நாய்க்கடிக்கு ஊசி போடுவதாக விமர்சித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் கையில்லாதவருக்கு கைகள் கொடுத்தோம். திமுக ஆட்சியில் காலோடு போனால் கால் இல்லாமலும், உயிரோடு போனால் உயிரில்லாமல் வருவதாகவும் சாடினார்.

News August 9, 2025

இந்த கோடுகளின் அர்த்தம் தெரியுமா?

image

‘Bleed lines’ என்ற இந்த கோடுகள் ரூபாய் நோட்டுகளில் ஏன் இருக்கின்றன என தெரியுமா? இவற்றை தேய்த்து தான் கண்பார்வை இல்லாதவர்கள் நோட்டின் மதிப்பை அறிகின்றனர். இந்த கோடுகள் நோட்டுகளின் மதிப்பிற்கு ஏற்ப கூடும், குறையும். ₹100 நோட்டின் இருபுறமும் 4 கோடுகள் இருக்கும். அதுவே, ₹200 நோட்டுகளில் 4 கோடுகளுடன் 2 பூஜ்ஜியங்கள் இருக்கும். ₹500 நோட்டுகளில் 5 கோடுகளும், ₹2,000 நோட்டில் 7 கோடுகளும் இருக்கும்.

News August 9, 2025

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?.. இதை பண்ணுங்க!

image

புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருந்தால் பட்டா பெற முடியுமா? ஆம், 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். அடையாள அட்டை, வசிப்பிட சான்று, மின்கட்டண ரசீது உள்ளிட்டவற்றுடன் பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து எந்த பிரச்னையும் இல்லையெனில் பட்டா வழங்குவார்கள். SHARE IT.

error: Content is protected !!