News March 17, 2024
நடிகர் வெங்கடேஷ் மகளுக்கு திருமணம்

‘வசந்த மாளிகை’, ‘தனிக்காட்டு ராஜா’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ராமா நாயுடுவின் மகன் தான் நடிகர் வெங்கடேஷ். தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் இவரது இரண்டாவது மகளின் திருமணம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட சில தமிழ் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Similar News
News July 5, 2025
வடிவேலு, ஃபகத் ஃபாசில் படத்தின் புது அப்டேட்

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான ‘மாரீசன்’ படத்தை மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் வருகிற ஜூலை 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடிவேலு, ஃபகத் இணைந்து ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News July 5, 2025
திமுக மூத்த தலைவர் அய்யாவு காலமானார்

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுகவில் தொண்டரணி தொடங்கியது முதலே Ex CM அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர். அய்யாவு மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். #RIP
News July 5, 2025
மாத சம்பளதாரர்களுக்கு… PF கணக்கில் வட்டி டெபாசிட்

PF கணக்கு வைத்திருக்கும் மாத சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை EPFO வெளியிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான வட்டித் தொகையை அது செலுத்தியுள்ளது. PF தொகைக்கு 8.25% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. 31/03/2025 தேதி வரைக்குமான வட்டி, உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது பாஸ்புக்கில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கணக்கில் PF-க்கான வட்டி டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதா… உடனே செக் பண்ணுங்க.