News October 9, 2024

பிணிகள் தீர்க்கும் பஞ்சாமிர்த பிரசாதம்!

image

காசி, காஞ்சி உள்ளிட்ட 7 மோட்சபுரிகளுக்குச் சென்று வழிபட்ட புண்ணியத்தை ஒருங்கே அருளும் இடம் புதுக்கோட்டை அடுத்துள்ள திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயிலாகும். காசிமன்னனின் பூர்வஜென்ம பாவத்தை போக்கிய இந்த திருத்தலத்திற்கு பாண்டியர்கள் கற்றளி கோவில் எழுப்பித்தந்ததாக வரலாறு. இங்குச் சென்று இறைவனை வணங்கி, பிரசாதமாக வழங்கும் பஞ்சாமிர்தத்தை உண்டால், தீராத நோய்களும் தீரும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Similar News

News August 7, 2025

CINEMA ROUND UP: ஹீரோவாகும் ஷங்கர் மகன்..

image

➤இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், அட்லீயின் AD இயக்கும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
➤அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
➤ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக நடித்துள்ள ‘புல்லட்’ படத்தின் டீசர் வரும் 8-ம் தேதி வெளியாகிறது.
➤சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

News August 7, 2025

திருப்பூர் SSI கொலை வழக்கில் அதிகாலையில் என்கவுன்டர்

image

திருப்பூர் உடுமலையில் SSI சண்முகவேல் கொலை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் என்கவுன்டரில் உயிரிழந்தார். தந்தை – மகன் நேற்று சரணடைந்த நிலையில், எஞ்சியிருந்த மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அதிகாலையில் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது, அவர் போலீசாரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டதில் மணிகண்டன் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 7, 2025

தந்தைக்காகவே அமைதி காக்கும் மகன்: தங்கர் பச்சான்

image

ராமதாஸின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் அன்புமணி அமைதியாக கடந்து செல்கிறார். இதுகுறித்து தங்கர்பச்சான், தந்தை போல் மகனும் தந்தை மீது குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும் என்று ராமதாசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். தந்தையின் மீதான மதிப்பு வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே மகன் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுரை கூறாமல் அமைதி காக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!