News March 17, 2024
கில்லின் கேப்டன்சியை பார்க்க காத்திருக்கிறோம்

ஷுப்மன் கில்லின் கேப்டன்சியை பார்க்க அனைவரும் காத்திருப்பதாக குஜராத் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா கூறியுள்ளார். குஜராத் அணியின் கேப்டனாக இருந்த பாண்ட்யா மும்பை அணிக்கு சென்ற நிலையில், கில் குஜராத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கில் குறித்து பேசிய நெஹ்ரா, கில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். கேப்டனாக செயல்படுவது அவரது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றார்.
Similar News
News April 5, 2025
வக்ஃப் விவகாரம்: தர்ம சங்கடத்தில் நிதிஷ்குமார்

வக்ஃப் திருத்த மசோதாவை ஆதரித்ததால், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் JDU கட்சியின் இளைஞர் அணி துணைத்தலைவர் டாப்ரெஷ் ஹசன், கட்சியில் இருந்து விலகியுள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், இதுவரை 5 பேர் ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். அதேபோல் NDA கூட்டணி கட்சியான உ.பியின் ராஷ்டீரிய லோக் தளத்தில் இருந்தும் ஷாஜாய்ப் ரிஷ்வி என்ற நிர்வாகி விலகியுள்ளார்.
News April 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் – 05 ▶பங்குனி – 22 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 09:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM ▶குளிகை: 06:00 AM – 07:30 AM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: அனுஷம் ▶நட்சத்திரம்: திருவாதிரை கா 10.47
News April 5, 2025
IPL-ல் இவர் மட்டுமே… மாஸ் சாதனை படைத்த கேப்டன்…!

18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே கேப்டன் ஹர்திக் பாண்டியாதான். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய அவர், மார்க்ரம், பூரன், ரிஷப் பண்ட், மில்லர், ஆகாஷ் தீப் ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.