News October 9, 2024
அக்.9: வரலாற்றில் இன்று

1941 – பனாமாவில் நடைபெற்ற ராணுவப் புரட்சிக்கு பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அரசுத் தலைவரானார்.
1967 – பொலிவியாவில் அக்.8 கைது செய்யப்பட்ட சே.குவேரா இன்று(அக்.9) புரட்சியைத் தூண்டியதாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
1981 – பிரான்ஸில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
2001 – இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
2004 – ஆப்கானித்தானில் முதல்முறையாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.
Similar News
News August 9, 2025
இந்த கோடுகளின் அர்த்தம் தெரியுமா?

‘Bleed lines’ என்ற இந்த கோடுகள் ரூபாய் நோட்டுகளில் ஏன் இருக்கின்றன என தெரியுமா? இவற்றை தேய்த்து தான் கண்பார்வை இல்லாதவர்கள் நோட்டின் மதிப்பை அறிகின்றனர். இந்த கோடுகள் நோட்டுகளின் மதிப்பிற்கு ஏற்ப கூடும், குறையும். ₹100 நோட்டின் இருபுறமும் 4 கோடுகள் இருக்கும். அதுவே, ₹200 நோட்டுகளில் 4 கோடுகளுடன் 2 பூஜ்ஜியங்கள் இருக்கும். ₹500 நோட்டுகளில் 5 கோடுகளும், ₹2,000 நோட்டில் 7 கோடுகளும் இருக்கும்.
News August 9, 2025
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?.. இதை பண்ணுங்க!

புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருந்தால் பட்டா பெற முடியுமா? ஆம், 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். அடையாள அட்டை, வசிப்பிட சான்று, மின்கட்டண ரசீது உள்ளிட்டவற்றுடன் பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து எந்த பிரச்னையும் இல்லையெனில் பட்டா வழங்குவார்கள். SHARE IT.
News August 9, 2025
‘கூலி’ மாயஜாலத்துக்கு இவர் தான் காரணம்: லோகேஷ்

விக்ரம், கூலி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கிரிஷ் கங்காதரன். இவரை குறித்து லோகேஷ் X பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிரிஷ் உங்களுடன் மீண்டும் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றும், உங்கள் தொலைநோக்கு பார்வை, கடின உழைப்பு, உறுதியான ஆதரவு கூலியில் பெரும் பங்காக இருக்கும் என தெரிவித்துள்ளார். நீங்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை காண மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் புகழ்ந்துள்ளார்.