News October 9, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அன்புடைமை. ▶குறள் எண்: 77 ▶ குறள்:
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். ▶பொருள்: அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.

Similar News

News August 18, 2025

TNPSC குரூப்-2 இரண்டாம் கட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு

image

TNPSC குரூப் 2, 2A தேர்வில் (20.6.2024 அறிவிக்கை) பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2-ம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆக.29-ல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் <>www.tnpsc.gov.in<<>> இணையதளம் மற்றும் தேர்வர்களுக்கு SMS, E-Mail மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2025

Detox Juice உண்மையிலேயே பயனுள்ளதா?

image

உடலை சுத்தப்படுத்துவதற்காக ABC ஜூஸ், கற்றாழை ஜூஸ் என பல வகையாக Detox Juice-களை பலர் அருந்துகின்றனர். ஆனால் இந்த ஜூஸ்கள் உண்மையிலேயே நமக்கு பயனளிக்கிறதா என்பது சந்தேகம்தான் என்கின்றனர் மருத்துவர்கள். நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற 24 மணி நேரமும் உழைக்கிறது கல்லீரல். இதனால் Detox juice நமக்கு தேவையற்றது எனவும் அது மக்களை ஏமாற்றி காசு பார்க்கும் வழி எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

News August 18, 2025

கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு நாளை மறுநாள் (ஆக.20) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த நாளையொட்டி திருவட்டார், விளவங்கோடு, அகஸ்தீஸ்வரம் ஆகிய வட்டங்களுக்கு விடுமுறை என கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். இதனை ஈடு செய்யும் வகையில், செப். 13-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!