News March 17, 2024
எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம்?

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், இனி ஒவ்வொருவரும் அதிகபட்சம் ₹50,000 வரைதான் ரொக்கப் பணம் கொண்டு செல்ல முடியும். ₹50,000க்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும்படை, 3 நிலையான கண்காணிப்பு படை (மொத்தம் 1,404 படைகள்) அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபடுவர்.
Similar News
News September 8, 2025
ராசி பலன்கள் (08.09.2025)

➤ மேஷம் – கவலை ➤ ரிஷபம் – வரவு ➤ மிதுனம் – தாமதம் ➤ கடகம் – செலவு ➤ சிம்மம் – ஆதரவு ➤ கன்னி – அசதி ➤ துலாம் – வெற்றி ➤ விருச்சிகம் – வருத்தம் ➤ தனுசு – நன்மை ➤ மகரம் – அமைதி ➤ கும்பம் – செலவு ➤ மீனம் – பயம்.
News September 8, 2025
கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்த ரஷ்யா

Enteromix எனும் கேன்சர் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது கேன்சர் கட்டிகளை முழுவதுமாக அழிக்கும் திறன் கொண்டது எனவும் நுரையீரல், பெருங்குடல், மார்பக புற்றுநோய்களை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பரிசோதனைகளில் 100% வெற்றிகரமான முடிவுகளை கொடுத்துள்ளதாகவும், நேரடி பயன்பாட்டிற்காக அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதல் பெற காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
News September 7, 2025
மக்களுக்காக போராடி உதயநிதி சிறை சென்றாரா? EPS கேள்வி

பாமக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை எனவும், திமுக கம்பெனியின் அடுத்த அதிபராக வர உதயநிதி துடிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், மக்களுக்காக போராடி உதயநிதி ஜெயிலுக்கு போயிருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.