News October 8, 2024

JOB: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பிரிவில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அக்.20 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை அலுவலர் பிரிவில் 8,113 இடங்களும், இளநிலை அலுவலர் பிரிவில் 3,445 இடங்களும் நிரப்படவுள்ளன. +2 தேர்ச்சி பெற்றவர்கள், டிகிரி முடித்தவர்கள் <>rrbapply.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முன்னதாக அக்.13 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

Similar News

News August 16, 2025

CM தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள்? உண்மை என்ன?

image

CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக பாஜக MP அனுராக் தாக்கூர் கூறியது பொய்யான தகவல் என TN Fact Check விளக்கம் அளித்துள்ளது. பாஜக MP கூறிய அவென்யூ எண் 11 என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு எனவும், 30 வாக்காளர்கள் வெவேறு வீடுகளில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அங்கு முஸ்லிம் மட்டுமல்ல, அனைத்து மதத்தினரும் வசிப்பதாகவும் கூறியுள்ளது.

News August 16, 2025

இனி அந்த மாதிரி கேரக்டரில் நடிக்க மாட்டேன்: அனுபமா

image

‘தில்லு ஸ்கொயர்’ தெலுங்கு படத்தில் அதிக கிளாமர் காட்டியதால், எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதீத கவர்ச்சி தனக்கு பிடிக்கவில்லை என்றாலும், கதைக்கு தேவைப்பட்டதால் நடித்ததாகவும், அது தன்னுடைய ரியல் கேரக்டருக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இனி இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

ஆக.22-ல் தமிழகம் வரும் அமித்ஷா!

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 22-ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். நெல்லையில் நாளை(ஆக.17) நடைபெற இருந்த பாஜக பூத் முகவர்கள் மாநாடு, நாகலாந்து கவர்னர் இல.கணேஷன் மறைவையடுத்து வரும் 22-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதில் கலந்துகொள்ளவே அமித்ஷா வருகை தர உள்ளார். முன்னதாக, கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், இனி ஒவ்வொரு மாதமும் தமிழகம் வரவிருப்பதாக கூறியிருந்தார்.

error: Content is protected !!