News March 17, 2024
வாக்காளர் பட்டியலில் சேர இன்றே கடைசி நாள்

18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (மார்ச் 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட தற்போது விண்ணப்பிக்கலாம். தங்கள் பெயரை சேர்க்க விரும்புவோர், www.voters.eci.gov.in இணையதளத்திலும், ‘Voter Helpline’ செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News October 18, 2025
இந்த பழங்களை மழை காலத்தில் சாப்பிடாதீங்க!

பருவ மழை காலம், மழையை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே பலவித தொற்றுநோய்களையும் கொண்டு வரும். மழைக்கால ஈரப்பதம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, சில பழங்களை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படி நீங்கள் சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன என்று மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…
News October 18, 2025
அவைக்குறிப்பில் தீபாவளி வாழ்த்து நீக்கம்: வானதி

இதுவரை தீபாவளிக்கு வாழ்த்து கூற மறுத்தவர்கள், ‘தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்’ என்று கேட்கக்கூட அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தீபாவளி வாழ்த்து கூறுங்கள் என்று பேசியதை கூட அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளனர் என்றார். இதைவிட பாசிசம் வேறேதும் இருக்க முடியாது என்றும் விமர்சித்தார். திமுக தரப்பில் தீபாவளி வாழ்த்து கூறாதது தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
News October 18, 2025
பங்கு சந்தையில் AI அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!

AI துறையில் உள்ள நிறுவன பங்குகளின் விலை மிக அதிகமாக ஏறுவதால், உலக பங்கு சந்தையில் விரைவில் ஒரு பெரிய சரிவு வரலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சில Tech நிறுவன பங்குகள் அதிக மதிப்பில் இருப்பது, சந்தை சில நிறுவனங்களை சார்ந்து இயங்குவது, ஆட்டோமேட்டிக் வர்த்தகம் வணிகத்தை வீழ்ச்சியடைய செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பல துறைகளில் முதலீடு செய்ய அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.