News October 8, 2024
ODI கிரிக்கெட் 50 ஓவர் போட்டியாக மாறிய கதை

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 1975-ல் தொடங்கிவிட்டாலும் அவை 60 ஓவர் போட்டிகளாக தான் இருந்தன. 1983-ல் இந்தியா கோப்பையை வென்றபோதும் 60 ஓவர் போட்டியாக தான் இருந்தது. 1987-ல் இந்தியா – பாகிஸ்தான் இணைந்து நடத்திய ரிலையன்ஸ் உலகக் கோப்பையில் தான் 50 ஓவர் முறை அறிமுகமானது. அந்த ஆண்டு Oct 08 முதல் Nov 08 வரை நடந்த அந்த உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது.
Similar News
News January 18, 2026
ராமதாஸிடம் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை: GK மணி

கூட்டணி குறித்த அறிவிப்பை ராமதாஸ் விரைவில் வெளியிடுவார் என GK மணி தெரிவித்துள்ளார். பாமக தலைமை நிர்வாக குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. அதன்பின் பேசிய GK மணி, அன்புமணி தனி இயக்கமாக செயல்படுவதாகவும், டெல்லி HC தீர்ப்பின் அடிப்படையில் அவர் பாமகவின் தலைவர் அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும், இனி ராமதாஸிடம் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்
News January 18, 2026
விராட் கோலிக்கு நெருக்கடி கொடுத்த மிட்செல்

இந்தியாவுக்கு எதிரான ODI தொடரில் 63, 134, 130 என ரன்களை குவித்து டேரல் மிட்செல் மிரட்டியுள்ளார். இதனால் புதிய ODI பேட்டிங் தரவரிசை பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு அவர் முன்னேறுவார். இன்றைய போட்டியில் விராட் கோலி சதம் அடித்தாலும் முதல் இடத்தை தக்க வைக்க முடியாது. கடைசி 7 இன்னிங்சில் 4 சதங்கள், 2 அரைசதம் அடித்து மிட்செல் சிறந்த ODI வீரராக வலம் வருகிறார்.
News January 18, 2026
முட்டை விலை குறைந்தது.. HAPPY NEWS

வரலாறு காணாத அளவு உச்சம் தொட்ட முட்டை கொள்முதல் விலை சமீப நாள்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று முட்டை கொள்முதல் விலை ₹5.30-லிருந்து ₹5.00 ஆக சரிந்துள்ளது. இதன்மூலம் கடந்த <<18882290>>2 நாள்களில்<<>> மட்டும் ₹60 காசுகள் வரை குறைந்துள்ளது. இதனால், சில்லறை கடைகளில் ₹6 வரை முட்டை விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உங்கள் ஊரில் ஒரு முட்டை எவ்வளவு? கமெண்ட் பண்ணுங்க.


