News March 17, 2024
தமிழகத்தில் மட்டுமே ஒரே கட்டத்தில் ஓட்டுப்பதிவு

தமிழகத்தை விட அதிக தொகுதிகளை கொண்ட உ.பி, பீகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும், குறைவான தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான், ம.பி மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. 25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும், 29 தொகுதிகளை கொண்ட ம.பிக்கு 6 தொகுதிகளுக்கும் மட்டுமே முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. 39 தொகுதிகளை கொண்ட தமிழகத்திற்கு மட்டுமே ஒரே கட்டத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
Similar News
News April 6, 2025
அமேசான் வசமாகுமா டிக்-டாக்? தீவிர பேச்சுவார்த்தை

டிக்-டாக் செயலியின் USA செயல்பாட்டை தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என அதன் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டேன்ஸ்க்கு டிரம்ப் கெடு விதித்துள்ளார். இல்லையேல் டிக்-டாக்கிற்கு தடை விதிக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதையடுத்து, டிக்-டாக்கை வாங்குவது தொடர்பாக அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
News April 6, 2025
தூக்கம் குறைந்தால், திறமை குறையும்

குழந்தைகள் போதுமான அளவுக்கு தூங்கவில்லை எனில், அது அவர்களின் மூளைத் திறனையும் மனநலத்தையும் பாதிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆழ்ந்த தூக்கத்தின்போது தான் குழந்தைகளின் மூளையின் இணைப்புகள் சீரமைக்கப்படுகிறது. அவர்கள் சரியாக தூங்கவில்லை எனில் மனச்சோர்வு, பதற்றம், நடத்தைப் பிரச்சனை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
News April 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 06) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!