News October 8, 2024
ஹரியானாவில் காங்கிரஸ் பின்னடைவுக்கு 5 காரணங்கள்

ஹரியானாவில் காங்., பின்னடைவுக்கு முதல்வர் நாற்காலிக்காக பூபிந்தர் ஹூடாவுக்கும், குமாரி சைலஜாவுக்கும் இடையே நடந்த பனிப்போரே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஜாட்களின் வாக்குகளில் கவனம் செலுத்தியதன் மூலம், ஜாட் அல்லாதவர்களை இழந்தது. பாஜகவை விட அதிக ஓட்டுகள் பெற்றாலும், அதிக இடங்களில் வெல்ல முடியவில்லை. பாஜகவின் திரைமறைவு யுக்திகள். நகர்ப்புற வாக்காளர்களை கவர முடியாமல் போனது காங்கிரஸை பாதித்தது.
Similar News
News August 7, 2025
திமுகவில் ஐக்கியமான அதிமுக மாவட்ட நிர்வாகி!

கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பொன் அழகிரி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தமிழ் செல்வன் உள்ளிட்ட 50 பேர் திமுகவில் இணைந்தனர். நேற்று இரவு, ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இந்த இணைப்பு நடைபெற்றது. கரூரில் செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைத்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
News August 7, 2025
கிழிந்த உடையுடன் காலேஜ் சென்றேன்: நடராஜன் உருக்கம்

தனக்கு படிப்பு அவ்வளவாக வராது, தெரிந்த ஒரே விஷயம் கிரிக்கெட் மட்டுமே என நடராஜன் தெரிவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் கிடைக்கும் பணத்தை வைத்து தான் கல்லூரி ஃபீஸ் கட்டியதாகவும், சில சமயங்களில் சரியான சாப்பாடு இல்லாமல், கிழிந்து உடையுடன் கல்லூரிக்கு சென்றதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், கடினமான உழைத்தால் முன்னேற முடியும் என்பதற்கு தானும் ஒரு உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
News August 7, 2025
ஸ்டன்னிங் லுக்கில் ராஷி கண்ணா

ஸ்டைலிஷ் உடையில் லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். வெண்ணிற உடையில் ஸ்டன்னிங் லுக்கில் கலக்கும் அப்புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இந்திய அளவில் பிரபலமான ராஷி கண்ணா, ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘அரண்மணை 3’ படத்தில் வரும் ‘அச்சோ அச்சோ அச்சச்சோ’ பாடலில் கிளாமர் காட்டி பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸானார்.