News October 8, 2024
1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

அக்டோபர் 15ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் எனக் குறிப்பிட்ட அவர், முன்னெச்சரிக்கையாக சென்னையில் 100, பிற மாவட்டங்களில் 900 இடங்களில் முகாம் நடத்தப்படும் என்றார். மேலும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Similar News
News December 8, 2025
எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள பயமா? நயினார்

திமுக ஆட்சி அமைந்ததும் குறைந்தபட்சம் 100 நாள்கள் சட்டசபை நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே செய்தீர்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 40 நாள்கள் கூட சட்டசபை நடைபெறாத நிலையில், நாடு போற்றும் நல்லாட்சி என விளம்பர நாடகங்களை நடத்துவதுதான் திமுக அரசின் சாதனையா? எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள பயந்து சட்டசபையை சரிவர கூட்டவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News December 8, 2025
PAK-ஐ கூடுதலாக அடித்திருக்க முடியும்: ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானுக்கு இன்னும் கூடுதலான இழப்புகளை நம்மால் ஏற்படுத்தி இருக்க முடியும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் நமது படைகள் பொறுமையுடன் செயல்பட்டு, தேவையான இழப்புகளை மட்டும் ஏற்படுத்தின. இந்த வெற்றிக்கு ராணுவம், நிர்வாகம், எல்லைப்புற மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம். இந்த பன்மைத்துவம் தான் உலகில் நம்மை தனித்துவமாக காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
₹500 கோடி கொடுத்தால் CM தான் ஆக முடியுமா?

₹500 கோடி கொடுத்தால் பஞ்சாப் CM ஆக முடியும் என அம்மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கூறியுள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யாரும் உங்களிடம் பணம் கேட்கமாட்டார்கள். ஆனால், பணம் கொடுப்பவர்கள் தான் CM வேட்பாளராக அறிவிக்கப்படுவர். தனது கணவரை CM வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றால், அவர் அரசியலில் கவனம் செலுத்தமாட்டார் என்றும் கவுர் தெரிவித்துள்ளார்.


