News March 17, 2024

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மானூர் கிராமத்தில் நேற்று (மார்ச்.16) இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மரக்காணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தென்களவாய் பழனி இல்லங்கள் தோறும் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் ஏராளமான ஒன்றிய மாவட்ட கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News

News August 8, 2025

என்ன சான்றுகளை பெறலாம்?

image

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News August 8, 2025

விழுப்புரம்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? இனி கவலை இல்லை

image

விழுப்புரம் மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க. <<17340173>>தொடர்ச்சி<<>>

News August 8, 2025

விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைந்துள்ள ரங்கபூபதி கல்லூரியில் நாளை (ஆக.9) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 18 – 40 வயதுடைய இருபாலரும் பங்கேற்கலாம். 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!