News March 17, 2024
ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் தமிழ் சினிமா

இந்த ஆண்டு இதுவரை தமிழில் 52 படங்கள் வெளியான நிலையில், ஒரு படம் கூட பெரிய வெற்றியைப் பெறவில்லை. புளூ ஸ்டார், லவ்வர் போன்ற ஒரு சில படங்கள் கவனம் ஈர்த்தன. பெரிய பட்ஜெட்டில் வெளியான கேப்டன் மில்லர், லால் சலாம், அயலான் போன்ற படங்கள் கூட பெரிதாக வெற்றிபெறவில்லை. GOAT, விடாமுயற்சி, இந்தியன் 2, வேட்டையன் படங்களைத்தான் கோலிவுட் பெரிதும் நம்பி இருக்கிறது. நீங்க எந்த படத்திற்கு வெயிட்டிங்?
Similar News
News October 26, 2025
வெளிநாட்டு கல்வி மோகம் குறைந்துவிட்டதா?

வெளிநாட்டுக் கல்விக்காக இந்திய மாணவர்கள் செலவிடும் தொகை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவை கண்டுள்ளது. 2024 ஆகஸ்டில் ₹3,688 கோடியாக இருந்த தொகை 24% சரிந்து, 2025 ஆகஸ்டில் ₹2,800 கோடியாக குறைந்ததுள்ளது. இதனால், இந்தியர்கள் மத்தியில் வெளிநாட்டு படிப்பின் மீதான மோகம் குறைந்து வருவதாகவும், உள்நாட்டில் கல்வியின் தரம் அதிகரித்திருப்பதை இதை காட்டுகிறது எனவும் RBI தெரிவித்துள்ளது.
News October 26, 2025
ரஜினி கதையில் விஜய் சேதுபதி!

‘ரெட்ரோ’ படத்திற்கு பிறகு, புது முகங்களை வைத்து சின்ன பட்ஜெட் படம் ஒன்றை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். அதே நேரத்தில் அவர் ரஜினிக்காக கதை ஒன்றை ரெடி செய்து விட்டு, நீண்ட காலமாக வெயிட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ரஜினி மற்ற படங்களில் தொடர்ந்து பிஸியாக இருப்பதால், தற்போது அதே கதையில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க கார்த்திக் சுப்பராஜ் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
News October 26, 2025
கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 101, பாஜகவுக்கு 101 என சமமாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாஜகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியதால், ஐக்கிய ஜனதா தளத்திற்குள் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், அதிருப்தியை வெளிப்படுத்திய அக்கட்சியை சேர்ந்த MLA சுதர்சன் குமார், 4 EX MLA-க்கள் உள்ளிட்ட 11 பேரை நிதிஷ் அதிரடியாக நீக்கியுள்ளார்.


