News March 17, 2024
திருச்சி:கல்லூரியில் நடந்த 19வது பட்டமளிப்பு விழா

திருச்சி கலை காவிரி நுண்கலை கல்லூரியில் நேற்று 19வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை
வழங்கினார். இந்த விழாவானது கல்லூரி செயலர் எஸ்.லூயிஸ் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றதில் கல்லூரி முதல்வர் ப. நடராஜன் வரவேற்புரை ஆற்றினாா் . திருச்சி மறைமாவட்ட ஆயா் எஸ்.ஆரோக்யராஜ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 11, 2025
திருச்சி: உறுதிமொழி எடுத்து சான்றிதழ் பெறுங்க

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை திருச்சி காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன் என்ற உறுதிமொழியை எடுத்து https://drugfreetamilnadu.tn.gov.in/en#pledgeஇல் சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்.
News August 10, 2025
திருச்சியில் 896 வழக்குகள் பதிவு

திருச்சியில் நடப்பாண்டில் போதை விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைப்பவர்கள் (ம) கடத்துபவர்கள் மீது 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 939 நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களிடமிருந்து 5005.6 கிலோ புகையிலை பொருட்களும்,12 இருசக்கர வாகனம், 8 நான்கு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் 5 நபர்கள் மீது குண்டர் தடுப்பு பதியப்பட்டுள்ளதாக திருச்சி எஸ்.பி தகவல் தெரிவித்துள்ளார்.
News August 10, 2025
திருச்சி: போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருட்களுக்கு எதிரான மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா, திருச்சி எம்.ஐ.டி கல்லூரியில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் இந்த உறுதிமொழியினை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ன ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.