News October 8, 2024
திண்டிவனத்தில் கார் மோதி விபத்து: ஒருவர் பலி

திண்டிவனம், வேம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவர், நேற்று முன்தினம் இரவு திண்டிவனம்-செஞ்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ரோஷணை போலீசார் கார் டிரைவர் ரமேஷை விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
விழுப்புரம்: HOTEL-ல தரமற்ற உணவா? இந்த நம்பருக்கு கால் அடிங்க!

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீபத்தில் சென்னை உணவகத்தில் தேரை, திருவள்ளூர் உணவகத்தில் எலி, கிருஷ்ணகிரி உணவில் பாம்பு என குற்றசாட்டு எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர்!
News December 7, 2025
விழுப்புரம்: தினமும் கையெழுத்து.. கார் ஓட்டுநர் தற்கொலை!

விழுப்புரம்: சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர், சரவணன் 6 மாதங்களுக்கு முன்பு காரில் திருவண்ணாமலைக்கு சவாரி வந்துள்ளார். அப்போது திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமினில் வெளிவந்தார். ஆனால் தினமும் செஞ்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதால் அங்கேயே அறை எடுத்து தங்கியுள்ளார். இதனால் மனஉளைச்சலில் நேற்று முன்தினம் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.