News October 8, 2024
சுத்தமல்லி அருகே கோயிலுக்கு சென்றவருக்கு வெட்டு!

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள தெற்கு விளாசம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(56) நேற்று முன்தினம் இரவு முப்புடாதியம்மன் கோயிலுக்கு வழிபட சென்றுள்ளார். அப்போது வேறொரு பிரிவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லட்சுமணன், அவரது மகன் ஹரி(19) & 17 வயது சிறுவன் 3 பேரை கைதாகியுள்ளனர்.
Similar News
News August 28, 2025
தேவையில்லாத செயலிகள்; மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சமூக வலைதளங்களில் வாயிலாக பண மோசடி அதிக அளவு நடைபெறுகிறது. எனவே மொபைலில் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். தேவையில்லாத லிங்க்கை ஓபன் செய்ய வேண்டாம். சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News August 28, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட் 27) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 27, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஆக.27] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.