News October 8, 2024
இஸ்ரோவின் அடுத்த டார்கெட்..!

வெள்ளி கோள் குறித்து ஆய்வு நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. கோளின் நிலப்பரப்பு குறித்த வரைபடம் தயாரிக்கவும், எரிமலைகளை கண்டறிந்து ஆய்வு நடத்தவும் 19 கருவிகளுடன் கூடிய விண்கலம் ஒன்றை அனுப்பவும் முடிவு செய்துள்ளது. இந்த 19 கருவிகளில் , 3 கருவிகள் சுவீடன், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து உருவாக்கப்பட உள்ளது. கோளின் வளிமண்டல இயக்கவியல், காலநிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
Similar News
News December 9, 2025
வேலூர்: லஞ்சம் கேட்டால், உடனே CALL!

வேலூர் மக்களே.., வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 9, 2025
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிய விஜய்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். மத்திய அரசுக்கு இருப்பதுபோல் தமிழகம் தனி மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்ற வேறுபாடு தனக்கு கிடையாது என விஜய் கூறியுள்ளார். மக்கள் சந்திப்பில் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக தீர்மானம் அனுப்பியும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என அவர் விமர்சித்தார்.
News December 9, 2025
பிரதீப்பின் ‘LIK’ ரிலீஸில் மீண்டும் சிக்கலா?

பிரதீப்பின் படங்கள் தொடர்ந்து ₹100 கோடி வசூலை கொடுத்ததால், அடுத்து ரிலீஸாக உள்ள LIK படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. சென்ற தீபாவளிக்கே ரிலீஸாக வேண்டிய இப்படம், டியூட் ரிலீஸால் தள்ளிப்போனது. இதனையடுத்து டிச.18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. அதாவது ஒரேடியாக அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிடுவதாக பேசப்படுகிறது.


