News October 8, 2024
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது

சிவகாசி வெம்பக்கோட்டை சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த சரஸ்வதி பாளையத்தை சேர்ந்த ராஜபாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் நதிக்குடியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த சூரிய பிரகாஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவருக்கும் கஞ்சா சப்ளை செய்யும் நபர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News January 16, 2026
JUST IN விருதுநகர்: மீண்டும் பரபரப்பை கிளப்பிய எம்.பி

கூட்டணி ஆட்சியில் வளமிக்க துறைகளை காங்கிரஸ் நாடியதில்லை என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு தேவை என தொடர்ந்து வலியுறுத்தும் மாணிக்கம் தாகூர் மகாராஷ்டிரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மக்களை மையமாக கொண்ட சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் குழந்தைகள் நலன் துறைகளை காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.
News January 16, 2026
விருதுநகர் நரேந்திரக்குமாருக்கு விருது வழங்கிய முதல்வர்

மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத் தமிழ் வகைபாட்டில் 2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளை தமிழக அரசு வெளியிட்டது. அதில் விருதுநகரை சேர்ந்த இரா.நரேந்திரக்குமாருக்கு(74) படைப்புத் தமிழ் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இவருக்கு விருது, விருது தொகையாக ரூ. 5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்தை வழங்கினார்
News January 16, 2026
விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY NOW!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. <


