News March 17, 2024
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

திருப்பூர், உடுமலை அனைத்து மகளிர் காவல் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களிடையே
குழந்தை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்ற கருத்து அடிப்படையில் தனியார் திருமண மண்டபத்தில் திறனறி போட்டிகள் இன்று நடைபெற்றன. இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News January 21, 2026
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கரடிவாவி, கரடிவாவி புதூர், செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டி புதூர், மல்லேகவுண்டம்பாளையம், வேப்பங்கொட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கோடாங்கிபாளையம் ஒரு பகுதி, பருவாய், சங்கோதிபாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News January 21, 2026
திருப்பூர் அருகே சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

தாராபுரம் அருகே கொளஞ்சிவாடி சொக்கநாதபாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி பாப்பாத்தி. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததால், பாப்பாத்தி கணவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்துவந்த தண்டபாணி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 21, 2026
திருப்பூரில் பெண்கள் அதிரடி கைது!

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாந்தி பிரோ (50), ஹிரோன் பொனியா(40) என்பதும் அவர்களிடம் 7 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


