News March 17, 2024

களமிறங்கியது தேர்தல் பறக்கும் படை குழு

image

சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் தருவதை தடுப்பதற்காக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் நேற்று அமைக்கப்பட்டது . அதைத் தொடர்ந்து இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பணியாற்றுவதற்கான குழுவினர் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நேற்று புறப்பட்டனர். அவர்களுடன் வீடியோ கேமரா மேன் மற்றும் போலீசார் சென்றனர்.

Similar News

News February 7, 2026

ராணிப்பேட்டை: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 7, 2026

ராணிப்பேட்டை: பயிற்சியை ஆய்வு செய்த கண்காணிப்பாளர்

image

இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர உடற்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர் குமார் (DCRB), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

News February 7, 2026

ராணிப்பேட்டை: மூதாட்டி பரிதாப பலி!

image

ஆற்காடு நக்கீரன் தெருவைச் சேர்ந்த தரணி பாய் (78) என்ற மூதாட்டி, வியாழக்கிழமை அண்ணா சிலை அருகே சாலையைக் கடந்தபோது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!