News March 17, 2024
BREAKING: 21 தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் செய்துள்ளது. நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளுடன் 21 மீனவர்களை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழக மீனவர்கள் கைது தொடர் கதையாகி வருகிறது.
Similar News
News July 6, 2025
திமுக, அதிமுகவிடம் இருந்து கற்க வேண்டும்: வானதி

பூத் கமிட்டியை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பதை திமுக, அதிமுகவிடம் இருந்து பாஜக கற்க வேண்டும் என்று MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்று வரும் பூத் கமிட்டி பயிலரங்கில் பேசிய அவர், வாக்கு சேகரிப்பில் இரு கட்சிகளும் பூத் மாஸ்டர்களாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, அவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு பாஜக மாஸ்டர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
News July 6, 2025
60 நாள்கள்; 9 மணி நேர தூக்கம்.. ₹9.1 லட்சம் வென்ற இளம்பெண்

‘Wakefit’ நடத்திய போட்டியில் புனேவை சேர்ந்த பூஜா மாதவ்(22), 60 நாள்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 9 மணி நேரம் தூங்கி ₹9.1 லட்சம் பரிசு வென்றுள்ளார். 4-வது ஆண்டாக இந்த ‘Sleep Champion of the Year’ போட்டி நடந்தது. நாடு முழுவதும் இருந்து சுமார் 1 லட்சம் பேர் அப்ளை செய்த நிலையில் 15 பேர் மட்டுமே இறுதியாக தேர்வாகியிருந்தனர். இந்தாண்டு பரிசு வென்ற பூஜா UPSC தேர்வுக்கு தயாராகி வருகிறாராம்.
News July 6, 2025
ரெட் ஜெயன்ட் பாணியில் களமிறங்கும் விஜய்?

ஜேசன் சஞ்சய் இயக்கிவரும் படத்தின் BTS காட்சிகளில், லைகா உடன் ‘JSJ’ என்ற தயாரிப்பு நிறுவன பெயரும் இடம்பெற்றிருந்தது. இது ஜேசனின் கம்பெனி என அப்போது தகவல் வெளியானது. இந்நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் மாத இதழில், பதிவு செய்யப்பட்ட புதிய Producers பட்டியலில் சஞ்சய்யின் பெயரும் உள்ளது. இதனால், உதயநிதி பாணியில் மகன் மூலம் தயாரிப்பில் இறங்குகிறாரா விஜய் என்ற கேள்வி எழுந்துள்ளது.