News March 17, 2024
நாம் தமிழா் கட்சியினா் பிரசாரம்

சிவகங்கை, திருப்பத்தூரில் மக்களவை தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் நாம் தமிழா் கட்சியினா் ஈடுபட்டனா். சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளராக வி.எழிலரசி அறிமுக நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, கட்சியினருடன் வாகனங்களில் மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்துக்கு சென்று நினைவுத் தூண், மருதிருவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
Similar News
News April 6, 2025
சிற்றுந்து இயக்க விண்ணப்பித்தவர்கள் குலுக்கல் முறையில் தோ்வு

சிவகங்கையில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகளாக 43 வழித்தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. 6 வழித்தடங்கள் திரும்பப் பெறப்பட்டும், சில வழித்தடங்களில் வழித்தட தொலைவு மாற்றியமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தக் திருத்தம் செய்து விண்ணப்பத்தை மீண்டும் சமர்ப்பித்தவர்களுக்கு வருகிற (ஏப்.8) காலை 11 மணிக்கு குழுக்கள் நடைபெற இருப்பதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
News April 6, 2025
மகிபாலன்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி திருவருள் இல்லத் திருமண மண்டபத்தில் ஏப்ரல்-09, அன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று மனுக்கள் வழங்கி, தீர்வு பெற்று செல்லலாம், என மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
News April 6, 2025
சிவகங்கை: 15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளர் பிரிவிற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இந்த வேலைக்கு மாதம் ஊதியம் 15,000 வழங்கப்படுகிறது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க <