News March 17, 2024
இன்று I.N.D.I.A கூட்டணி பொதுக்கூட்டம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் தொடங்கிய பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நேற்று மும்பையில் நிறைவடைந்தது. தொடர்ந்து, இன்று மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
Similar News
News July 6, 2025
இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சி சாப்பிட கெடச்சது..

மழையின் ஓசையில் மனம் லயிக்க, டீயின் சூடு இதம் அளிக்க, நாவில் இனிக்க ஒரு ஸ்நாக்ஸ் இருந்தால் போதும், இந்த பொறப்புதான் ருசிச்சி சாப்பிட கெடச்சது என அனுபவிக்கலாம். அப்படி உருகிப் போய் சாப்பிட கேரளாவின் பெஸ்ட் ஸ்நாக்ஸ் லிஸ்டை பாருங்க ➤அச்சப்பம் அல்லது அச்சு முறுக்கு ➤நேந்திரம் பழ சிப்ஸ் ➤முறுக்கு ➤உண்ணியப்பம் ➤கேரளா பக்கோடா ➤ஓரப்பம். இந்த மழை சீசனில் உங்களுக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ் வகை என்ன?
News July 6, 2025
சூர்யா 46 பக்கா.. வெங்கி அட்லூரி உறுதி

தான் சூர்யாவிடம் 3 கதைகளைக் கூறியதாகவும், அதில் ஒன்று அவருக்கு பிடித்துப் போக, அதிலே அவர் நடித்து வருவதாகவும் ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், சூர்யாவின் மிகப்பெரிய ரசிகர் நான் என்றும் பெருமைப்பட கூறியுள்ளார். சூர்யாவின் 46-வது படம் பக்கா ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்த காம்போ எப்படி இருக்கும்?
News July 6, 2025
விலை மளமளவென குறைந்தது.. 1 கிலோ ₹35

தக்காளி விலை மீண்டும் குறைந்துள்ளது. வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹15 குறைந்து ₹35-க்கு விற்பனையாகிறது. ஒட்டன்சத்திரம், ஓசூர் உள்ளிட்ட சந்தைகளில் கடந்த சில நாள்களாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியிலும், நகரவாசிகள் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். தற்போது மீண்டும் சரிவைக் கண்டுள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.