News October 7, 2024

தொடர் விடுமுறை: சரசரவென இறங்கிய சிறப்பு பஸ்கள்!

image

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வரும் 9, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோயில், கன்னியாகுமரி, தூத்துக்குடிக்கு 1105 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு 300 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 110 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Similar News

News December 9, 2025

வீட்டு வாசலில் இந்த ‘3’ பொருள்களை வைக்காதீங்க..

image

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டு வாசலில் இந்த 3 பொருள்களை வைப்பது, கேடு விளைக்கும் என நம்பப்படுகிறது. ➤வாடிய செடிகள், கொடிகள் வீட்டு வாசலில் இருப்பது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும் ➤கருப்பு அல்லது அடர் நிறத்திலான பொருள்கள் வாசப்படி மேட், சிலைகள் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தடுக்கும் என நம்பப்படுகிறது ➤உடைந்த சேதமடைந்த பொருள்கள், ஓடாத கடிகாரங்கள் வாசலில் இருந்தால், எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும்.

News December 9, 2025

உலகக் கோப்பை ஸ்குவாஷ்: 3 தமிழக வீரர்கள் பங்கேற்பு

image

சென்னையில் இன்று முதல் டிச.14 வரை 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இதற்கான கோப்பையை DCM உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இந்தியா, ஜப்பான், மலேசியா, எகிப்து உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணியில் அனாஹத் சிங், தமிழகத்தை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

News December 9, 2025

குக் வித் கோமாளி பிரபலத்தை மணக்கிறாரா பிக்பாஸ் ஜூலி?

image

ஜூலிக்கு கடந்த வாரம் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது தொடர்பான போட்டோக்களை அவர் வெளியிட, எதிலுமே மாப்பிள்ளையின் முகம் இல்லை. எனவே, யார் அவர் என அனைவரும் தேடத்தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அவர் பெயர் முகமது இக்ரீம் எனவும், குக் வித் கோமாளி, ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சிகளில் ஷோ ஏற்பாட்டாளராக பணியாற்றி இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதுபற்றி Official தகவல் வரவில்லை.

error: Content is protected !!