News October 7, 2024

விழுப்புரத்தில் இன்று 471 மனுக்கள் பெறப்பட்டன

image

மக்கள் குறைதீர் கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகியவை கோரி 471 மனுக்கள் (மாற்றுத் திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்கள்: 26) வரப்பெற்றன. அவை அனைத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

Similar News

News August 19, 2025

BREAKING: விழுப்புரம் அருகே கொடூர கொலை

image

விக்கிரவாண்டி அருகே உள்ள ஆவுடையார்பட்டு கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் குமரன். அதே பகுதியில் ஜான்சன் நாய் பண்ணை வைத்துள்ளார். இன்று மாலை இருவருக்கும் வழி தொடர்பாக தகராறு ஏற்பட்டதில் ஜான்சன் பிரியாணி கிண்டும் பெரிய கரண்டியால் குமரனை தாக்கியுள்ளார். இதில் குமரன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 19, 2025

விழுப்புரம்: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

விழுப்புரம் மக்களே இனி ரேஷன் அட்டையில் மாற்றம் செய்ய அலைய தேவையில்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இந்த <<>>இணையதளத்தை கிளிக் செய்து குடும்ப உறுப்பினர் பெயரை சேர்க்க/நீக்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும். மேலும் சந்தேங்களுக்கு இந்த 1967 (அ) 1800-425-5901 எண்களில் அழைக்கலாம். அல்லது மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

விழுப்புரம்: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

image

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!