News October 7, 2024
சபரிமலை பிரசாதத்தில் அதிக பூச்சிக்கொல்லி!

திருப்பதி லட்டுக்கு அடுத்து, சபரிமலை பிரசாதம் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. சபரிமலையில் வழங்கப்படும் அரவண பாயாசத்தில் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி இருந்தது கடந்தாண்டு கண்டறியப்பட்டது. 6.65 லட்சம் டப்பாக்களில் இருந்த ரூ.4.5 கோடி மதிப்புள்ள பிரசாதம், தனியாக எடுத்து வைக்கப்பட்டது. அதை உரமாக பயன்படுத்த தற்போது தேவசம் போர்டு முடிவெடுத்துள்ளது. இந்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படவில்லை.
Similar News
News August 14, 2025
17 வயது சச்சின் சிறப்பான சம்பவம் செய்த நாள் இன்று

1990-ம் ஆண்டு இதே நாளில் மான்செஸ்டரில் இந்திய கிரிக்கெட் அணியை வெல்ல வைக்க களமிறங்கியது இளஞ்சிங்கம். அன்று அவருக்கு வயது 17. அந்த இளம் வீரர், 189 பந்துகளில் 17 பவுண்டரிகள் உடன் 119 (முதல் சதம்) ரன்களை விளாசினார். இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அவரை திரும்பிப் பார்த்தது. அவர்தான் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்.
News August 14, 2025
சுதந்திர தினம்.. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

சுதந்திர தினத்தையொட்டி நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும். பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது என்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
News August 14, 2025
HDFC மினிமம் பேலன்ஸ் அதிகரிப்பா?

ICICI வங்கி புதிய வங்கி கணக்கு தொடங்குபவர்கள் இனி மாதம் ₹50,000 மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என அறிவித்தது சர்ச்சையானது. இதனையடுத்து HDFC வங்கியும் தன்னுடைய மினிமம் பேலன்ஸ் தொகையை ₹25,000 வரை உயர்த்துவதாக தகவல்கள் வந்தன. ஆனால் அப்படி எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும், சேமிப்பு கணக்கின் மினிமம் பேலன்ஸ் ₹10,000 தான் எனவும் HDFC விளக்கமளித்துள்ளது.