News October 7, 2024

அனுமதியின்றி பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை

image

கோவை கலெக்டர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தீபாவளி வரும் அக்.31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளை தவிா்த்து) தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விருப்பம் உள்ளவா்கள் கோவை டிஆர்ஓ – விடம் உரிமம் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 5, 2025

கோவையில் நூதன முறையில் மோசடி!

image

கோவை சிவானந்தபுரம் வேல்முருகன் நகரை சேர்ந்தவர் காயத்ரி (29). இவரிடம் 50 வயது பெண் நட்பு ரீதியாக பழகி வந்தார். நேற்று இந்த பெண் காயத்ரியிடம் 9cm நீளம் 6cm அகலத்தில் ஒரு கட்டியை தங்க கட்டி என தந்து, அதை விற்று தரும்படி கூறி 3½ பவுன் தங்கச் செயினை வாங்கிச் ஏமாற்றி சென்றார். பின் காயத்ரியன் கணவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

News August 5, 2025

கோவை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

கோவையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News August 5, 2025

கோவை: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதிக்குள், <>https://startuptn.in/ <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!