News October 7, 2024
போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.3.31 லட்சம் பறிமுதலில் 2 பேர் மீது வழக்கு

சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 1ஆம் தேதி ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அதில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் ராமகிருஷ்ணனிடம் ரூ.3.28 லட்சம், பீரோவில் இருந்த கணக்கில் வராத பணம் ரூ.3,250 கைப்பற்றப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூக்கன், அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் ராமகிருஷ்ணன் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News August 20, 2025
நாளை நடைபெறும் முகாம் அட்டவணை

காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, காளையார் கோவில், திருப்பத்தூர், சிங்கம்புணரி உட்பட்ட பகுதிகளில் நாளை (ஆக.21) நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
மனித நேய ஜனநாயக கட்சி பதில் அளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி சென்னையில் உள்ள முதன்மைத் தேர்தல் அலுவலகத்தில் வரும் 26.8.25ஆம் தேதிக்கு முன்னர் நேரில் ஆஜராகி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின்னரும் கடந்த 6 ஆண்டுகளாக எவ்வித தேர்தலிலும் பங்கேற்காததன் காரணத்தை விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று (ஆக.20) தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் நீதிமன்றத்தில் வேலை

சிவகங்கை மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி (B.E/M.E உட்பட) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் செப். 9க்குள் <