News October 7, 2024
ஜம்மு காஷ்மீர்: 3 அடுக்கு பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வார்ரூம் பகுதியை சுற்றி 100 மீட்டர் தொலைவிற்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வார்ரூம் பகுதியில் அனுமதி அளிக்கப்படும் என்று ஜம்மு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 6, 2025
தூங்குவதற்கு முன் இதை செய்யுங்க!

பருவமழை காலத்தில் தூங்குவதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தூங்குவதற்கு முன் குளிர்ந்த நீர் அல்லது பானங்களை அருந்த வேண்டாம். அது சளி மற்றும் இருமல் பிரச்னையை ஏற்படுத்தும். உங்கள் பாதங்கள் ஈரமாக இருந்தால், பூஞ்சை தொற்று ஏற்படலாம். அறை ஈரப்பதமாக இருந்தால், பாக்டீரியாக்கள் வளர்ந்து நோய் ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News August 6, 2025
தமிழகம் ஈர்த்த முதலீடுகள் என்ன? எல்.முருகன் கேள்வி

தமிழகத்தில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு எந்த நிறுவனங்கள் தொழிற்சாலையை தொடங்கின என்பது பற்றி திமுக அரசு அறிவிக்க வேண்டுமென எல்.முருகன் தெரிவித்துள்ளார். அப்போதுதான் எந்தெந்த நிறுவனங்கள் வந்துள்ளன என்பதை மக்கள் அறியமுடியும் என்றார். இல்லையெனில் CM ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் அறிவிப்புகள் வெற்று விளம்பர அறிவிப்புகள் என்பது உறுதியாகும் என்றார்.
News August 6, 2025
ஆணவக் கொலை.. 8 வாரங்களில் விசாரிக்க உத்தரவு

கவின் ஆணவக்கொலை வழக்கை 8 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய CBCID-க்கு மதுரை HC உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதியின் கண்காணிப்பில் இந்த வழக்கை விசாரிக்க கோரி HC-யில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அரசு சார்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை முறையாக நடைபெறுவதால் மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை எனவும் தெரிவித்தனர்.