News October 7, 2024

புதுவையில் ரேஷன் அரிசி வழங்குவதில் சரியான திட்டமிடல் இல்லை

image

புதுவை முதல்வர் அறிவித்த 10 கிலோ அரிசி போடுவதன் மூலம் கையாளுதல் ரூ. 20 லட்சம் மட்டுமே கிடைக்கும் ஆனால் ரேஷன் கடை ஊழியர்களின் மாத சம்பளத்திற்கான தொகை ரூ. 60 லட்சம் ஆகும். சிவப்பு அட்டை – 20 கிலோ, மஞ்சள் அட்டை 10 கிலோ அரிசி அந்தோதியா திட்ட அட்டைக்கு 35 கிலோ அரிசி என தொடர்ந்து வழங்கினால் மட்டுமே ஊழியர்களுக்கு மாத சம்பளம் தொடர்ந்து வழங்க முடியும் என நியாய விலை கடை ஊழியர்கள் நல சங்கம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 20, 2024

புதுகை: நவோதயா பள்ளியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

புதுச்சேரி காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர் கண்ணதாசன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்படும் தெரிவுநிலை தேர்வின் அடிப்படையில் சேருவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நேற்று (19ம் தேதி) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி நாள் வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, தென்காசி, நெல்லையை தொடர்ந்து காரைக்காலிலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 20, 2024

புதுவையில் 23 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

image

புதுவை தொழிலாளர் துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி இன்று வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் வரும் 23 ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 2500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன. இதில் 10, 12 வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் இளநிலை பட்டம் முடித்தவர்கள் பங்கேற்கலாம்.