News March 17, 2024

அரையிறுதியில் லக்‌ஷயா சென் போராடி தோல்வி

image

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தோல்வியடைந்தார். பர்மிங்காமில் நேற்றிரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தோனேசியா வீரர் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்ட சென், முதல் செட்டில் 12-21 என்ற கணக்கில் பின் தங்கினார். 2ஆவது செட்டை 21-10 என கைப்பற்றிய சென், வெற்றியைத் தீர்மானிக்கும் 3ஆவதுசெட்டில் 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

Similar News

News October 23, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 23, ஐப்பசி 6 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்:10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை

News October 23, 2025

ஸ்மிருதி இரானி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பில்கேட்ஸ்

image

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2 என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதில் பில்கேட்ஸ் நடிக்க இருப்பதாக நம்ப தகுந்த தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணுவதன் அவசியம் குறித்து அதில் பில்கேட்ஸ் வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது. ஸ்மிருதிக்கும், பில்கேட்ஸுக்கும் இடையே நடக்கும் வீடியோ கால் உரையாடல் போன்று, இந்த காட்சி அமைய உள்ளதாம்.

News October 23, 2025

விண்ணில் தெரிந்த அற்புதம்… அரிய PHOTO

image

பிரபஞ்சத்தின் பேரழகை பார்க்க சிறந்த இடங்களில் ஒன்று நியூசிலாந்து. அந்நாட்டின் தென் தீவுக்கு milky way-வை போட்டோ எடுக்க சென்ற 3 போட்டோகிராபர்களின் கேமராவில் அற்புத காட்சி சிக்கியது. புயலின் போது உருவாகும் red sprites (சிவப்பு கீற்றுகள்) 90 கிமீ வரை உயரும். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடும் என்பதால் படம்பிடிப்பது கடினம். இந்நிலையில் தான் இவர்கள் கேமராவில் இந்த அரியக் காட்சி சிக்கியது.

error: Content is protected !!