News March 17, 2024
மணிப்பூர் முகாமில் உள்ளவர்களுக்கு சிறப்பு வசதி

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசிக்கும் மக்களும், வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் புலம்பெயர்ந்தோருக்கு உள்ள திட்டத்தை போல மணிப்பூரிலும் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்ட அவர், வாக்குச் சீட்டின் மூலம் முடிவு அறிவோம். அமைதியாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
Similar News
News October 29, 2025
Cinema Roundup: லோகேஷுக்கு ஜோடியாகும் வாமிகா கபி

*கிஷன் தாஸ் நடித்துள்ள ‘ஆரோமலே’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. *வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தில் ‘கல்யாணி பிரியதர்ஷன்’ ஹீரோயினாக நடிக்கவுள்ளார். *கவினின் ‘கிஸ்’ பட ஓடிடி உரிமையை ஜீ5 பெற்றுள்ளது. *சிரஞ்சீவியின் ‘மெகா158’ படத்தில் தான் நடிக்கவில்லை என மாளவிகா மோகனன் அறிவிப்பு. *லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் வாமிகா கபி.
News October 29, 2025
சிங்கம்.. சிங்கம்.. இது வேற சிங்கம்

வனவிலங்கு புகைப்படக் கலைஞர், கென்யா நாட்டில் அரிதான காட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார். சுருள் முடியுடன் ஆண் சிங்கத்தின் அழகை, மிக அழகாக படம் பிடித்துள்ளார். சிங்கத்தின் “புதிய ஹேர் ஸ்டைல்” SM-யில் வைரலாகி வருகிறது. இது உலகின் மிக அழகான சிங்கங்களில் ஒன்று. இதன் போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த சிங்கம் எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 29, 2025
லோக்கல் ரவுடி போல் பேசும் ராகுல்: பாஜக

வாக்குகளை பெறுவதற்காக <<18139805>>PM மோடி டான்ஸ்<<>> கூட ஆடுவார் என ராகுல் காந்தி விமர்சித்ததை பாஜக கடுமையாக சாடியுள்ளது. லோக்கல் ரவுடி போல ராகுல் பேசுவதாகவும், PM மோடிக்கு ஆதரவாக வாக்களித்த ஒவ்வொரு ஏழை இந்தியரையும் அவமானப்படுத்திவிட்டதாகவும் விமர்சித்துள்ளது. மேலும், நாட்டின் வாக்காளர்களையும், ஜனநாயகத்தையும் அவர் கேலி செய்துவிட்டதாகவும் சாடியுள்ளது.


