News March 16, 2024

கடலூரில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

image

கடலூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட
ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன் ஆகியோர் உள்ளனர்.

Similar News

News August 10, 2025

கடலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !

image

பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE செய்யுங்க..

News August 10, 2025

கடலூர்: சேவை இல்லத்தில் உணவை ஆட்சியர் ஆய்வு

image

கடலூரில் உள்ள சேவை இல்லத்தில் நேற்று தயார் செய்யப்பட்ட உணவை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் நாள்தோறும் சேவை இல்லத்தை தூய்மையாக பராமரிப்பதோடு, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் காவலர்கள், கண்காணிப்பாளர்கள் விடுதியினை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News August 10, 2025

மஞ்சக்குப்பம்: மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

image

மஞ்சக்குப்பம் சமூக நீதி மாணவர் விடுதியில் மாணவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, உணவு, இடவசதிகள், தங்கும் அறை வசதி, மின் விளக்கு, மின்விசிறி வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், கண்காணிப்பு கேமரா தொடர் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும் நேற்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!