News March 16, 2024
125 வயது ஆமை இறந்து போனது

ஐதராபாத்தின் நேரு உயிரியல் பூங்காவில் வாழ்ந்துவந்த 125 வயது ஆண் ஆமை இன்று உயிரிழந்தது. வயோதிகம் காரணமாக உறுப்புகள் செயலிழந்து ஆமை மரணித்ததாக பூங்கா மருத்துவர் தெரிவித்திருக்கிறார். கடந்த 10 நாட்களாக உணவருந்தாமல் அவதியுற்றுவந்த ஆமை இன்று உயிரிழந்தது. இந்த ஆமையுடன் 95 வயதான மற்றொரு ஆமையும் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 8, 2025
சித்திரை மாத ராசிபலன்: 5 ராசிக்காரர்களுக்கு சூப்பர்

வருகிற 14-ம் தேதி சித்திரை மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தில் 5 ராசிகளுக்கு சூப்பராக இருக்கும் என ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது, மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், தனுசு ஆகிய 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். சூரியனைப் போல அதிர்ஷ்டம் பிரகாசிக்க வாய்ப்புள்ளது. பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற வாய்ப்புள்ளதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நீங்க என்ன ராசி?
News April 8, 2025
மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலி 3,600ஆக அதிகரிப்பு

மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 3,600ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 28-ல் நேரிட்ட நிலநடுக்கத்தால் மியான்மரில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பலர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தொடர்ந்து பலியாகி வருவதால் பலி அதிகரித்தபடி உள்ளது. தற்போது 5,017 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160 பேரை காணவில்லை. இதனால் பலி மேலும் உயரக்கூடும்.
News April 8, 2025
விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் PBKS

CSKக்கு எதிரான IPL போட்டியில் PBKS அணி தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ய PBKS அணியின் தொடக்க வீரர் ப்ரப்சிம்ரன் 0 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் ஷ்ரேயஸ் 9 ரன்களிலும் ஸ்டோய்னிஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எதிர் முனையில் ப்ரியன்ஷ் ஆர்யா 19 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். PBKS அணி 7.2 ஓவர்களில் 81 ரன்கள் எடுத்துள்ளது.