News October 6, 2024
WhatsApp-ல் புதிய அப்டேட்..!

Contact Syncing என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பயனாளர்கள் வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப்பட்ட (Linked Devices) எந்த சாதனத்தில் இருந்தும் தொடர்புகளை சேர்க்கவும், நீக்கவும் முடியும். இதற்கு மொபைல் போன் தேவையில்லை. கணினி, லேப்டாப்களில் Turn on Contacts, Delete Contacts என்ற டேப்ஸ் மூலம் பயனர்கள் போன் இல்லாமல் தொடர்புகளை நிர்வகிக்கலாம்.
Similar News
News August 16, 2025
ரஷ்யா போரை நிறுத்தாது: உக்ரைன் அதிபர் உருக்கம்

தங்கள் மீதான போரை ரஷ்யா நிறுத்தப் போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தைகள் அலாஸ்காவில் துவங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன் வீடியோ வெளியிட்டு இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார். தற்போதும் ரஷ்யா தங்களது மக்களை கொன்று குவித்து வருவதாகவும், போர் நிறுத்தத்தை அவர்கள் விரும்புவதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
News August 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 429 ▶குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். ▶ பொருள்: வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.
News August 16, 2025
திமுக கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்

தூய்மை பணியாளர்களை வைத்து அரசியல் செய்வது அற்பமானது என திருமா விமர்சித்துள்ளார். அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரது நோக்கமாக இருப்பதாக கூறினார். சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 11- யை தனியாருக்கு கொடுத்தது கடந்த அதிமுக ஆட்சியில் என்றும், அதற்கு அவர்களிடம் என்ன பதிலுள்ளது என கேட்டார். தற்போது 2 மண்டலங்களை தனியாருக்கு விட்ட திமுக அதனை திரும்பபெற கோரிக்கை விடுத்தார்.