News March 16, 2024
திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

இந்திய தேர்தல் ஆணையர் அவர்கள் நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திண்டுக்கலில் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று இரவு மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் கீழ் கட்சி சுவர் விளம்பரம், மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியை ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.
Similar News
News December 17, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல்:-தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நாளை 18/12/2025 வியாழக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. முன்னனி வங்கிகள் கலந்து கொண்டு, மகளிர் தொழில் முனைவோருக்கு உடனுக்குடன் வங்கி கடனுக்கான ஒப்புதல் வழங்கபடும் என்று மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். அருமையான தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 17, 2025
மகளிர் கடன் முகாம்-ஆட்சியர் அறிவிப்பு..!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்ஒரு அறிவிப்புவிடுத்தார்.தமிழ்நாடு மகளிர்தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் பெண்கள்தொழில் தொடங்க வங்கி கடன் சிறப்பு முகாம்,ஆட்சியர்அலுவலகத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை)நடக்கிறது. இதில் முன்னோடிவங்கி மேலாளர்கள்விண்ணப்பங்களை பரிசீலித்துகடன்ஒப்புதல்வழங்க உள்ளனர்.தொழில் ஆர்வமுள்ளபெண்கள்ஆதார் அட்டை,ரேஷன்கார்டு சாதிசான்றிதழ்,கல்வி சான்றிதழுடன்வந்து பங்கேற்கலாம் என்றார்
News December 17, 2025
திண்டுக்கல் அருகே விபத்து சம்பவ இடத்திலேயே பலி!

வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் சாலையில், சாய்பாரத் கல்லூரி அருகே நேற்று ஈச்சர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


