News March 16, 2024
ஆற்காடு: உழவர் ஆலோசனை மையம் திறப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி, கண்ணமங்கலம் கூட்ரோடு மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு உழவர் ஆலோசனை மையக் கட்டடத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று திறந்து வைத்தார்.
Similar News
News April 10, 2025
ராணிப்பேட்டை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மேலும் இன்று ஏப்ரல் 10, நாளை ஏப்ரல் 11 மேலும் 1 டிகிரி வெயில் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்கம் ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உணர முடியும் என்று தெரிவித்துள்ளது.
News April 10, 2025
ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <
News April 10, 2025
ராணிப்பேட்டையில் பயிற்றுநர் வேலை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளது. பயிற்றுநர் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் dsorpt@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரிக்கு ஏப்ரல் 20 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.