News March 16, 2024

அனுதாப ராணி என அழைத்தார்கள்

image

“அனுதாப ராணி” என மக்கள் தன்னை அழைத்ததாக நடிகை சமந்தா கூறியுள்ளார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டபோது, அதுகுறித்து பொதுவெளியில் பகிர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கூறிய அவர், நோயின் தாக்கத்தால் சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தும், தன்னால் அதை அனுபவிக்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சமந்தா விரைவில் மீண்டுவர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

Similar News

News October 20, 2025

Sports 360°: டேக்வாண்டோவில் இந்தியாவுக்கு வெண்கலம்

image

*பால்கன் ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில், அமன் கடியான் வெண்கலம் வென்றுள்ளார். *நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20-ல் இங்கிலாந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. *ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. *US ஓபன் ஸ்குவாஷில், இந்தியாவின் அபய் சிங் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

News October 20, 2025

கரூர் துயரம்போல் கர்நாடகாவில் ஒரு சம்பவம்

image

கரூரில் நடந்ததைபோல் கர்நாடகாவில் CM சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. புத்தூர் பகுதியில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20,000 பேர் மட்டுமே பிடிக்கக் கூடிய இடத்தில், சுமார் 1 லட்சம் பேர் திரண்டதே நெரிசலுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 20, 2025

28 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

image

சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், தருமபுரி, காஞ்சி, கள்ளக்குறிச்சி, குமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சை, தேனி, வேலூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், கவனமாய் இருங்க நண்பர்களே!

error: Content is protected !!